இணையதளம் வழியாக தபால் நிலையங்களில் பணம் செலுத்தும் வசதி

சேலம் மாவட்டத்தில் இணையதளம் வழியாக தபால் நிலையங்களில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
.
.
Published on

சேலம்:

மத்திய அரசின் 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இந்தியாவில் உள்ள 1.5 லட்சம் தபால் அலுவலகங்களும் இணையத்தின் வாயிலாக இணைக்கப்படுமென மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி இணையவழி, மொபைல் பேங்க் மற்றும் ஏ.டி.எம். வாயிலாக பணபரிவர்த்தனை செய்ய இயலும் என்று சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர்  ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதன் மூலம் வங்கிகளுக்கும்,  தபால் அலுவலகங்களுக்கும் இடையிலான பண பரிவர்த்தனைகள் இனி இணைய வாயிலாக செய்யலாம்.  இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயனடைவார்கள். 

ஆகவே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அருகில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கி எளிய முறையில் பணப்பரிவர்த்தனை செய்து பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com