புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
எடப்பாடியில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி
எடப்பாடியில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள, புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விமர்சையாக நடைபெற்றது.

எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு இன்று காலை தொடங்கிய பேரணியில், திரளான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி இயேசுவை போற்றிப் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். 

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற குருத்தோலை பவனி, புனித செல்வநாயகி ஆலய வளாகத்தில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி, ஸ்டீபன், கார்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

எடப்பாடி அடுத்த லண்டன் மிஷன் பேட்டையில் உள்ள தேவாலயம், நைனா பட்டி ஆர்.சி தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி கூட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com