ரேசன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய மனு

தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய வேண்டும்
கலெக்டரிடம் மனு கொடுக்கவந்த உழவர் கூட்டமைப்பினரை படத்தில் காணலாம்.
கலெக்டரிடம் மனு கொடுக்கவந்த உழவர் கூட்டமைப்பினரை படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

ஒருங்கிணைந்த உழவர் கூட்டமைப்புத் தலைவர் பன்னீர்செல்வம் சேலம் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு பனைமரத்தின் சிறப்பை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பனைமரத்தின் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை ரேஷன் அட்டைகளில் மூலம் கருப்பட்டியை மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். 

ரேசன்கடையில் எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்று பனை வெள்ளமும் விற்பனை செய்ய வேண்டும். இதனால் பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com