பவளத்தானூர் அகதிகள் முகாமில் தீக்குளித்து பெயிண்டர் தற்கொலை

பவளத்தானூர் அகதிகள் முகாமில் தீக்குளித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்-கலம் அருகே பவளத்தா-னூரில் அகதிகள் முகாம் உள்ளது. 

இங்கு விஜயகுமார் மகன் கலையரசன் (வயது 20)  என்பவர் வசித்து வந்தார். இவர் உறவினர்களுடன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். 

கடந்த 3 மாதமாக அவ-ருக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதில் மனமுடைந்து காணப்-பட்ட கலையரசன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதனால் வலிதாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து கலையரசனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கலையரசன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com