கல்லூரி மாணவியை கடத்திய பெயிண்டர் போக்சோவில் கைது

கல்லூரி மாணவியை கடத்திய பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
.
.
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவடடம் தாரமங்கலம்  சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன்  ராஜேந்திரபிரசாத் (வயது 22). பெயிண்டர்.  இவர், ராமிரெட்டிபட்டி கிராமம் பூனையன்வளவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை  கடத்தி சென்றார். 

இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்ேபரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். நேற்று  அவர்களை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார், ராஜேந்திரபிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .

X

Maalai Malar
www.maalaimalar.com