

வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று அதிகாலை சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி அருகே சென்றபோது, கம்மாளப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி சென்ற டிராக்டர் மீது இந்த பஸ் பலமாக மோதியது. இதில் நிலை குலைந்த டிராக்டர், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் டிராக்ட ரில் பயணித்த கம்மாளப் பட்டியை சேர்ந்த சின்ன பையன், ஜல்லூத்துப்பட்டி கணேசன், கம்மாளப்பட்டி சேகர், பெருமாள் ஆகிய 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தி னால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. போலீசார் விபத்துக் குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்கு வரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.