

ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே உத்தமசோழபுரம் சூளைமேடு ஆணை கவுண்டர்தெருவில் ஓம் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் 128-ம் ஆண்டு உற்சவ விழாவும் பொங்கல் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீர் பண்டிகையும் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை திருமணிமுத்தாறுலிருந்து அம்மன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும். தொடர்ந்து யாக கும்ப பூஜையும், பொங்கல் நிகழ்ச்சியும். இரவில் அக்னி கரகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று காலை முதல் மாலை வரை மஞ்சள் நீர் பண்டிகையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.