வீட்டுக்குள் திடீரென புகுந்த வடமாநில வாலிபர்

சேலம் சூரமங்கலத்தில் இன்று அதிகாலை வீட்டுக்குள் திடீரென புகுந்த வடமாநில வாலிபர்.
.
.
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் தர்ம நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென புகுந்து  மொட்டை மாடியில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தார். 

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். 

பின்னர் இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர்  மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. போலீசார், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது அதிகாலையில் 2 பேர் வந்ததாகவும், அதில் ஒருவர் தப்பிஓடி விட்டார். ஒருவர்  மட்டுமே பிடிபட்டதாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com