

சேலம்:
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் ராணுவப் பிரிவின் தேசிய மாணவர் படை ‘சி’ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெற்ற தேர்வில் முதல் நாள் செய்முறைத் தேர்வும், 2-ம் நாள் எழுத்துத் தேர்வும் சோனா கல்லூரி வளாகத்திலேயே நடத்தப்பட்டது.
தேர்வுகளின் போது, பயிற்சி, வரைபட வாசிப்பு, ஆயுதம் கையாளுதல், தகவல் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு, பேரிடர் மேலாண்மை, சமூக சேவை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, ஆளுமை மேம்பாடு போன்ற பொது பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
தேசிய மாணவர் படைக்கு சரியான நேரத்தில் உதவிய சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர்கள், கல்லூரி முதல்வர்களுக்கும் கோவை குரூப் கமாண்டர் எல்.சி.எஸ். நாய்டு நன்றி தெரிவித்தார்.
என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி அனில் வர்மா, ஈரோடு ராணுவ அதிகாரிகள், தேசிய படை பயிற்சியாளர்கள், தேசிய மாணவர்படை கல்லூரி அதிகாரிகள் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சோனா தொழில்நுட்பக் கல்லூரி, பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து என்.சி.சி.அதிகாரி ராகேஷ் மிஸ்ரா செய்திருந்தார்.