தேசிய தீயணைப்பு வார விழா மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி

தேசிய தீயணைப்பு வார விழா மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு படையினர் ஒத்திகை நடத்திய காட்சி.
தீயணைப்பு படையினர் ஒத்திகை நடத்திய காட்சி.
Published on

தாரமங்கலம்:

தேசிய தீயணைப்பு வாரவிழா ஏப்ரல் 14 முதல் 20 வரை கொண்டாடப்பட்டுவருகிறது, அதன்படி நேற்று சி.ஐ.எஸ்.எப். அசிஸ்ட்டண்ட் கமாண்டட் ஏசி மிஸ்ரா அவர்களின் மேற்பார்வையில் சேலம் இரும்பாலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி மாரியம்மன் கோவில் திடலில் தீ தடுப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சியை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி காட்டினர்.

அப்போது வீடுகளில் மின் கசிவு, சிலிண்டர் போன்றவற்றால் ஏற்படும் விபத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும், புகை மண்டல பகுதியில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்று கவச உடையணிந்து ஒத்திகை மூலம் செய்து காட்டினர். 

இந்நிகழ்வை ஆய்வாளர் கல்யாண், உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், உதயகுமார், காவலர்கள் கணேசன், அன்பழகன் ஆகியோர் செயல்முறைகள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com