மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆடுகள்

மேட்டூர் அருகே மர்மமான முறையில் 7 ஆடுகள் இறந்து கிடந்தன.
.
.
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி, மாமரத்துமேட்டை சேர்ந்தவர் விவசாயி தனசேகரன் (42). இவர் 20-கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். 

நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்த்த பின் பட்டியலில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை சென்று பட்டியலில் பார்த்தபோது 7 ஆடுகள் குடல் சரிந்து மர்மமான இறந்து கிடந்தன. இதனை கண்ட விவசாயி தனசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.  

இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள்,  எப்படி இறந்தன? அப்பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர். 

மேலும் இறந்து போன ஆடுகளை அப் பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது. மர்ம விலங்கு கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com