ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் 5 நாட்களாக நிற்கும் மர்ம கார்

ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் 5 நாட்களாக மர்ம மான கார் ஒன்று நின்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையத்தில் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்.
உடையார்பாளையத்தில் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கடந்த 5 நாட்களாக ஆந்திரா பதிவு எண் கொண்ட கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுபற்றி அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அதன் உரிமை யாளர் குறித்து எந்த தகவலும் இல்லை.

5 நாட்களாக நிற்பதால் உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com