தாரமங்கலம் நகராட்சி கூட்டம்- சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு

தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சி அவசர கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார்.ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரியினங்களை உயர்த்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை நிறைவேற்றும் பொருட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டத . இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியம், சின்னுசாமி, ருக்மணி, தமிழ்செல்வி ஆகிய 4 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். .

X

Maalai Malar
www.maalaimalar.com