2 குழந்தைகளின் தாய் மர்மச்சாவு

சேலம் நெத்திமேட்டில் 2 குழந்தைகளின் தாய் மர்மச்சாவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
,
,
Published on

சேலம்:

சேலம் நெத்திமேடு புணரங்காடு பகுதியை சேர்ந்தவர் அர்சுணன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 28). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

இந்த நிலையில்  கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து நேற்றிரவு 1 மணியளவில்   வீட்டில்  பத்மாவதி  தற்கொலை செய்து  கொண்டதாக  அவரது பெற்றோருக்கு   அர்சுணன் தகவல் தெரிவித்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த  அவரது பெற்றோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தூக்கில் தொங்கிய படி இருந்த பத்மாவதியை  மீட்டு   சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது.   இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி  வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com