சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி வீட்டை விட்டு துரத்தியதால் விரக்தி

அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி வீட்டை விட்டு துரத்தியதால் விரக்தி
.
.
Published on

சேலம்:

சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா (வயது 45). இவரது மகள் மகேஸ்வரி (20).

இவர்கள் இருவரும் இன்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

பின்னர் திடீரென தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார், விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி 2 பேரிடமும்  விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

தங்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் ஆக்கிரமித்து தங்களை வெளியேற்றி விட்டனர்.  இதனால் நாங்கள் வசிக்க இடம் இல்லாமல் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து உள்ளோம். 

எனவே இது குறித்து கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதையடுத்து  விஜயா மற்றும் அவரது மகள் மகேஸ்வரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com