சேலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு

சேலத்தில் மாயமான மாணவன் சென்னையில் போலீசார் மீட்டனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. இவர் சேலத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் பிளஸ்-2 முடித்து விட்டு நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவர் படிக்காமல் இருந்ததாகவும், அதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது. 

இதில் மனவருத்த மடைந்த மாணவன் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் மாணவனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வீரமணி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய செல்போன் சிக்னலை வைத்து பார்த்ததில் மாணவன் சென்னையில் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள உறவினர்கள் மூலம் மாணவனை போலீசார் மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com