சேலத்தில் மாயமான முதியவர் பிணமாக மீட்பு

சேலத்தில் மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
.
.
Published on

சேலம்:

சேலம் குகை திருச்சி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி(வயது 69). இவர் கடந்த 19-ந் தேதி தேர்தல் அன்று ஓட்டு போட்டு விட்டு வெளியில் சென்றார். அதன் பிறகு அவரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

 இதுபற்றி அவரது மனைவி கிருஷ்ணவேணி செவ் வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அவர் வேம்படி தாளம் அருகே திருவாச்சி பட்டு என்ற பகுதியில் ஒரு கோவில் அருகே பிணமாக கிடந்தார்.  இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com