மின்கசிவால் குடிசையில் தீ விபத்து

கொளத்தூர் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
.
.
Published on

மேட்டூர்

கொளத்தூரை அடுத்த வெடிக்காரனூரை சேர்ந்தவர் மாதி (வயது 75). இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மூதாட்டி மாதி வீட்டில் திடீரென தீப்பிடித்தது. 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக குடிசையில் தீப்பற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com