வாழப்பாடியில் மருத்துவ மதிப்பீட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மருத்துவ மதிப்பீட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
.
.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது. 

இந்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழப்பாடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுனர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர் புகழ் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் மாணவர்கள் இசைக்கருவிகளை வாசித்தபடி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மருத்துவ முகாம் குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன், அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் குணாளன், சிறப்பாசிரியர்கள் வெங்கடாஜலம், தேன்மொழி, ஆனந்தி, காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் அசோக் ராஜா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com