சேலம், நாமக்கல்லில் நாளை மறுநாள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடம் தேர்வு

சேலம், நாமக்கல்லில் நாளை மறுநாள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடம் தேர்வு நடைபெற உள்ளது.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  சேலம் மாவட்டத்தில் அமைக்–கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர்.

நேற்று  (21-ந்தேதி) சனிக்கிழமை தொழில் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. நாளை (23-ந்தேதி) ேதர்வு கிடையாது. மாணவ- மாணவிகள் படிக்கும் விதமாக நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து நாளை மறுநாள் (24-ந் தேதி)  செவ்வாய்க்கிழமை கணிதப் பாட தேர்வு நடக்க உள்ளது.   இந்த தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி  1.15 மணி அளவில் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com