சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண்பிணம்

சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண்பிணம் கிடந்தது.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் ரெயில் நிலையத்துக்கும் சேலம் ரெயில் நிலையத்துக்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று  பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் கிரே கலர் முழுக்கைச் சட்டையும் கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.

அவர் யார் என்பது தெரியவில்லை. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com