ஏற்காட்டில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அமைதி பாதையாத்திரை

ஏற்காட்டில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அமைதி பாதையாத்திரை நடந்தது.
பாதையாத்திரையில் கலந்து கொண்டவர்கள்.
பாதையாத்திரையில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அமைதி பாதையத்திரை இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி சுமார் 12 கிலோமீட்டர் மஞ்ச கோட்டையில் இருக்கும் அந்தோணியார் கோவில் வரைக்கும் பாதயாத்திரை நடைபெற்றது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். 

இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் இறைச்சி உண்ணாமல் இருந்து 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப் பார்கள். 

மூன்றாவது வெள்ளிக் கிழமை ஏற்காடு கத்தோலிக்க திருச்சபையில் இருந்து

மஞ்சகுட்டை புனித அந்தோணியார் கோவில் வரைக்கும் நூற்றுக்கணக் கானோர் பாதயாத்தி ரையாகச் சென்று வருவது உண்டு. அதுபோல் இன்று பாதையாத்திரை நடைபெற்றது.

இதில் குருக்கள் கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் பெரியோர்கள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்து பாதயாத்திரை சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com