வருமுன் காப்போம் திட்ட முகாம்

ஏற்காட்டில் வருமுன் காப்போம் திட்ட முகாமில் நலதிட்ட உதவி வழங்கல்.
.
.
Published on

ஏற்காடு:

ஏற்காட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. ஏற்காடு வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை தாங்கினார்.

விழாவில் ஏற்காடு தி.மு.க. செயலாளர் தங்கசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.டி. பாலு, வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார்,  ஏற்காடு ஒன்றிய துணைச் சேர்மன் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுருதி பவுல்ராஜ், துணை தலைவர் மாணிக்கம். மஞ்சகுட்டை பாபு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com