காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காளியம்மன் கோவில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.
காளியம்மன் கோவில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.
Published on

சேலம்:

சேலம் நெத்திமேட்டில் உள்ள காளியம்மன் கோவில் திருப்பணி செய்யப்பட்டு இன்று காலை கும்பாபிசேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 4-ந்தேதி இரவு 8.30 மணிக்கு முதல் கால யாக பூஜையும், நேற்று காலை 2-ம் காலை யாக பூஜையும் நடைபெற்றன. 

நேற்று இரவு 3-ம் காலை யாக பூஜை, தீபாராதனை, பரிவார தெய்வங்கள் சகித மூலவர் காளியம்மனுக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தன. இன்று (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு 4-ம் காலை யாக பூஜை நடந்தது. 

தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தன. பின்பு 9.45 மணிக்கு மூலவர் விமான கோபுரத்துக்கு மகா கும்பாபி சேகமும், காளியம்மன் மற்றும் பரிவார தெர்ய்வங் களுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

பின்பு தச தரிசனம், தச தானம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், அன்ன தானமும் நடைபெற்றது.  விழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இறைபணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com