விளையாட்டு வீரர்களுக்காக புதிய செல்போன் செயலி அறிமுகம்

விளையாட்டு வீரர்களுக்காக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
.
.
Published on

சேலம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டு வீரர்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், போட்டி–களில் கலந்து கொள்வதற்கு வசதியாக TNSPORTS ஆடுகளம் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த செய–லியை  விளையாட்டு வீரர்க–ளின் ஈமெயில் முகவரிம் செல்போன் எண்ம் பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 வரும் காலங்களில் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இந்த செயலியில் பதிவு செய்தவர்க–ளுக்கு மட்டுமே டிஜிலாக்கர் மூலம் வழங்கப்பட உள்ளது. 

எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் விளையாட்டு சங்கத்தினர், விளையாட்டில் ஆர்வம் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக TNSPORTS ஆடுகளம் செயலியை வருகிற 12-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com