சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களான 1 மாநகராட்சி,  6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட் சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு வருகின்ற 19&ந்தேதி  தேர்தல் நடைபெற வுள்ளது. இதற்கென 38 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 709 வாக்குச்சாவடிகளில் 7,19,361 வாக்காளர்களும், 6 நகராட்சிகளில் உள்ள 273 வாக்குச்சாவடிகளில் 2,25,778 வாக்காளர்களும், 31 பேரூராட்சிகளில் உள்ள 537 வாக்குச்சாவடிகளில் 3,90,894 வாக்காளர்களும் என மொத்தம் 1,519 வாக்குச்சாவடிகளில் 13,36,033 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இத்தேர்தலுக்கு மாநகராட்சி பகுதிக்கு 1 வாக்கு எண்ணும் மையமும், நகராட்சி பகுதிகளில் 6 வாக்கு எண்ணும் மையங்களும், பேரூராட்சி பகுதிகளில் 9 வாக்கு எண்ணும் மையங்களும் என மொத்தம் 16 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் வெப் கேமராக்கள் பொருத்தப் பட்டு, ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன. அதற்கான அறைகள் அமைக்கும் பணியும், அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.  இதையடுத்து   வாக்கு  எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மதியம்  உணவு சாப்பிடும்  தனி அறை வசதி, குடிநீர் வசதி,  கழிப்பிட வசதி செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com