சேலம் மாவட்டத்தில் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியீடு

சேலம் மாவட்டத்தில் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இதில்  சேலம் மாவட்டத்தில்   699 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.  இதற்கான வேட்பு மனு தாக்கல்  கடந்த மாதம் 28-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 

சேலம் மாநகராட்சியில் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி என 4 மண்டலம், 6 நகராட்சி, 31 பேரூராட்சி என 41 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் என 24 இடங்களிலும் வேட்பு மனு பெறப்பட்டது. இந்த மாதம் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. 

மாவட்டத்தில் உள்ள 699 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து 6-ந்தேதி (சனிக்கிழமை) இந்த வேட்பு மனுக்கள்  பரிசீலனை நடைபெற்றது. இதில் தகுதியற்ற வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இன்று மாலை 3 மணி வரை வாபஸ் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com