முதுகலை ஆசிரியர் பணிக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

முதுகலை ஆசிரியர் பணிக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
.
.
Published on

சேலம்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர்,  உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1க்கான 2,207 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி  வெளியிட்டது. இந்த எழுத்துத் தேர்வு  கடந்த 12-ந்தேதி  தமிழகம் முழுவதும் தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை  நடைபெறுகிறது. இதற்காக சேலம்  மாவட்டத்தில்  11  கல்லூரிகளில் தேர்வு மையங்கள் மற்றும் நாமக்கல்  மாவட்டத்தில் 4 தேர்வு  மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

இங்கு பி.எட், எம்.எட்., படித்த வெளி மாவட் டங்களில் வசிக்கும் பட்ட தாரிகள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். 6-வது நாளான இன்று  காலை (பேட்ஜ்-3) கணிதம்-3 பாடப்பிரிவிற்கும், மதியம் (பேட்ஜ்-4) ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வு எழுத தொலை தூர மாவட்டங்களில்  தமிழக அரசு தேர்வு மையம் அமைத் துள்ளதால் பல சிரமத்திற்கு மத்தியில் அங்கு சென்று தேர்வு எழுதினர்.

நாளை (18-ந்தேதி) காலையில் (பேட்ஜ்-5) ஆங்கிலம்-11 பாடப்பிரிவிற்கும், மதியம் (பேட்ஜ்-6) ஆங்கிலம்-2 பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற உள்ளது. 20-ந்தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான மாவட்ட நுழைவுச்சீட்டு மற் றும் தேர்வு மைய நுழைவு சீட்டு ஆகியவற்றை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com