தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர்

சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.
தபால் வாக்கு செலுத்திய அரசுப்பணியாளர்கள்.
தபால் வாக்கு செலுத்திய அரசுப்பணியாளர்கள்.
Published on

சேலம்:

60 கோட்டங்களை கொண்ட சேலம் மாநகராட்சியில், நாளை 709 வாக்குச்சாவடி மையங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தல் பணியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலமாக அளித்திட அதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக விநியோக்கப்பட்டது.

 இதனை பெற்று கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்து தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தபால் நிலைய ஊழியர், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பெட்டியில் தபால் வாக்குகளை செலுத்தினார். 

இது தவிர அரசு அலுவலர்களும், ஊழியர்களும் நேரடியாகவும் வந்து தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர். இதனிடையே மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குப் பெட்டிகள் வைத்திருந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com