ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 ஆண்டுகளாக  பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இது தொடர்பாக மேலும் தபால் நிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட செயலர் ரத்தினவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com