சேலம் அருகே வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் பலி

சேலம் அருகே வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் உயிரிழந்தார்.
.
.
Published on

சேலம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாபு (வயது35), மாதப்பன், கோவிந்தன். அரசு பஸ் டிரைவர்களான இவர்கள் சேலம் பணிமனையில் வேலை செய்து வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு காரணமாக அவர்களது பணியை முடித்துவிட்டு ஒரே மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினர்.

 தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி அருகில் செல்லும் போது மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆனது. உடனே வாகனத்தை 3 பேரும் தள்ளியபடி சென்றனர். 

அப்பொழுது அந்த வழியாக பின்னால் வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக பாபு மீது மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

மாதப்பன், கோவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபப்ட்டனர். 

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com