

சேலம்:
சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 5ந் தேதி வரை இந்த விற்பனை நடக்கிறது. ஒருவர், ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம்.
தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். முதலீடு முடியும் தேதியில் என்ன மதிப்பு உள்ளதோ அந்த மதிப்பிற்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் மாற்றிக்கொள்ளலாம். எனவே இந்த திட்டத்தை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த தகவல் சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.