மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை, செயல் விளக்கம்

மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை, செயல் விளக்கம் நடந்தது.
தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்ற போது எடுத்த படம்.
தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

மேட்டூர்:

மேட்டூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை எப்படி பாதுகாப்பாக அழைத்துச் செல்வது மற்றும் தீ பரவ விடாமல் தடுப்பது எவ்வாறு என்பது குறித்த செயல்முறை விளக்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. 

மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் இந்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். 

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி மற்றும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com