சேலம் தாதகாப்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய தந்தை -மகன்கள் மீட்பு

சேலம் தாதகாப்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய தந்தை -மகன்கள் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
.
.
Published on

அன்னதானப்பட்டி:

 சேலம் தாதகாப்பட்டி கேட், பெரியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 40). இவருடைய மகன்கள் திருமால் சாய்ஹரி (11), அழகர் (6). இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று நள்ளிரவு வீட்டை உள்புறமாக பூட்டி விட்டு தூங்க சென்று விட்டனர். பின்னர் நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் போட்டு அருகில் குடியிருப்பவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் வெளியே சத்தம் கேட்கவில்லை. 

இதையடுத்து அருண் குமார் சேலம் செவ்வாய் ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் கலைச் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவசர கால சிறப்பு கருவிகள் மூலம் வீட்டின் கதவை திறந்து அங்கு சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.  இந்த சம்பவத்தால் நள்ளிரவு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com