ஈஸ்டர் பிரார்த்தனைக்கு சென்ற தந்தை, மகள் மாயம்

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு சென்ற தந்தை, மகள் மாயமானார்கள்.
.
.
Published on

சேலம்:

சேலம் சன்னியாசிகுண்டு எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37). இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நிரஞ்சனா 3 வயது மகள் உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் திருநாளை  முன்னிட்டு மணிகண்டன் அவரது மகள் நிரஞ்சனா ஆகியோர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்றனர். 

அதன்பிறகு அவர்கள்  வீடு திரும்பவில்லை. இதனால்  அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி உறவினர்கள் உதவியுடன்  பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார், எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தந்தை மற்றும் மகளை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com