ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றை பதிவு செய்ய வசதி

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றை இணைய முகவரியில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
.
.
Published on

சேலம்:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஆயுள்சான்று சமர்ப்பித்த பிறகே தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது 2022-23 -ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் தங்களது ஆயுள் சான்றை http://tnuwwb.tn.gov.in என்ற இணைய முகவரியில் பென்சனர் லைப் சர்டிபிகேட் என்பதை தேர்வு செய்து தங்களது பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து பெறப்படும் ஒருமுறை கடவு சொல்லை கொண்டு உள் சென்று தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மேலும், ஆதார் எண், குடும்ப அட்டை எண், ஓய்வூதிய ஆணை எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து அந்த ஆவணங்களை அசலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com