நிமிடத்திற்கு 2 ஆயிரத்து 200 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்திக்கு வசதி கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு ஏற்பாடு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நிமிடத்திற்கு 2 ஆயிரத்து 200 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்திக்கு வசதி கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
.
Published on

சேலம்:

 வருகிற ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

2 ஆயிரத்து 200 கிலோ லிட்டர் 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்கை வசதிகள் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆக்சிஜன் வசதி கொண்ட 1,460 படுக்கைகள் உள்ளன. மேலும், நிமிடத்துக்கு 2,200 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில்  கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது என   மருத்துவமனையின் டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 1,460 படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆக்சிஜன் வசதி கொண்டவை. கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சை அளிக்க முடியும். 

3 டேங்குகள் 

தற்போது, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சையில் இல்லை. எனினும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகளை அதிகரித்துக் கொள்ள முடியும். சிக்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இருப்பதால், சிகிச்சைக்கான குழுவையும் உடனடியாக ஏற்படுத்த முடியும். மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ள 35 ஆயிரம் கிலோ லிட்டர், 13 ஆயிரம் கிலோ லிட்டர், 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 கலன்கள் (டேங்குகள்) உள்ளன.

மேலும், தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் நிமிடத்துக்கு 2 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு அலகு மற்றும் நிமிடத்துக்கு 200 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அலகும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com