பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
.
.
Published on

பனமரத்துப்பட்டி:

சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை நேற்று பனமரத்துப்பட்டி பேரூராட்சி, மல்லூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் மற்றும் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்தார். 

அங்கு வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பு அறையினை பார்வையிட்டார். மேலும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர்கள் பனமரத்துப்பட்டி சிவராஜ், மல்லூர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com