வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்தார்.
ஆத்தூர் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி..
ஆத்தூர் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி..
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நடைபெவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான சேலம் மாவட்ட தேர்தல்  பார்வையாளர் அண்ணாதுரை  தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்தார். 

வீரகனூர் பேரூராட்சி, தெடவூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலகங்களை அவர் பார்வையிட்டு  அங்கு வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பு அறையினை பார்வையிட்டார். 

மேலும் கெங்கவல்லி  பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலகம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினையும், ஆத்தூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலகத்தையும் ஆய்வு செய்து, நகராட்சி வாக்கும் எண்ணும் மையமான நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியினை  பார்வையிட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

இந்த ஆய்வின்போது  ஆர்.டி.ஓ. சரண்யா, நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com