கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம்- தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாம்

சேலத்தில் கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
.
.
Published on

சேலம்:

சேலம் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாதாரம் (வயது 52) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் கடந்த 3  ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை நேரம் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

 அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6:45 அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

 இது குறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஜெயராமை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாபேட்டை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது அதன்படி பணத்தைச் செலுத்திய பிறகு ஜாமீனில் வெளிவந்த வந்தனர்.

இதன் பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்த பிரான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு போலீசார் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

ஜாமினில் வெளி வந்த இவர் கடந்த 20 நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்துப் போட்டு வந்தார். ஆனால் நேற்று இவர் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கடத்தல் நடத்தி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும்  போலீசாரிடம் பிடிபட்ட  லாரி உரிமையாளரான சுரேஷ் அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் மர்மநபர்கள் ஜெயராம் பெங்களூருக்கு கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. போலீசார் நெருக்கடி காரணமாக ஜெயராமனை ஒப்படைத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. 

ஆனாலும் ஜெயராம் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. போலீசார்  தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com