வீட்டை தன் பெயருக்கு எழுதி தராததால் விஷம் குடித்த வாலிபர் சாவு

சேலத்தில் வீட்டை தன் பெயருக்கு எழுதி தராததால் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
.
.
Published on

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை முத்தவல்லி இப்ராகிம் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் உத்தம் (வயது 44). இவர் கடந்த 6-ம் தேதி தனது தாயாரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு தாயார் மறுக்கவே ஆத்திரம் அடைந்த கணேஷ் உத்தம் வீட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து திடீரென குடித்து விட்டார். 

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேஷ் உத்தம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com