மின்சாரம் தாக்கி கறிக்கடை தொழிலாளி சாவு

தீவட்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி கறிக்கடை தொழிலாளியானார்.
.
.
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த சுண்டக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் காடையாம்பட்டி நாச்சினம்பட்டி பிரிவு  பகுதியில் கோழி கடை நடத்திவருகிறார். இந்த கடையில் ஊழியராக அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் லட்சுமணன் (24) வேலை செய்து வந்தார்.

 இன்று காலை லட்சுமணன் கடையை திறந்து  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் லட்சுமணன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com