

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள செல்லபிள்ளைகுட்டை ஊராட்சியில் கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
செல்லபிள்ளைகுட்டை டோனி கிரிக்கெட் குழு சார்பில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில், சேலம் மாவட்டம் முழுவதும் இருந்தும், 32 கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின.
கடந்த ஒரு வாரமாக டி-20 மேட்சாக நடைபெற்ற, இந்த கிரிக்கெட் போட்டிகள் கொரோனா விதிகளை கடைபிடித்து, 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்களை மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்கள் அனைவரும் முக கசவம் அணிந்தும், சானிடைசர் பயன்படுத்தியும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இந்த போட்டியில் அம்மன்கோவில்பட்டி கிராம அணி சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி கோப்பையை கைப்பற்றியது. செல்லபிள்ளைகுட்டை டோனி அணி 2ம் இடமும், துட்டம்பட்டி ட்வின்ஸ் ஸ்டார் அணி மூன்றாமிடமும் பிடித்து வெற்றிபெற்றது.