சேலம் மாவட்டத்தில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.
.
.
Published on

சேலம்:

இந்தநிலையில் தற்போது கொரோனாவின் 3-வது அலை முன்னை விட வேகமாக பரவ தொடங்கி உள்ளது.  இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 7 மாதங்களுக்கு பிறகு தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 937 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,009 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 509 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com