சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 264 பேர் தொடர்ந்து சிகிச்சை

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 264 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 13 பேருக்கு  கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மாநகராட்சியில் 6 பேர், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம் ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா ஒருவர் வீதமும், சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல், ஈரோட்டில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது. 67 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு 264 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com