நிலத்தகராறில் மோதல் : 8 பேர் மீது வழக்கு

தாரமங்கலத்தில் நிலத்தகராறில் மோதல் : 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அரசு கால்நடை மருத்துவமனை பகுதியில் வசித்துவருபவர் தேவராஜ். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (31) என்பவருக்கும் இடையே வீட்டு மனை நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்பு இது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதையடுத்து இரு தரப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன், மாரியம்மாள், நாகம்மாள், ரோஷினி, துரையன், தங்கதுரை, சுமதி, ராஜகுமாரி ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com