ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக புகார்: டிப்பர் லாரிகளை முற்றுகை

ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக புகார்: டிப்பர் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
டிப்பர் லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.
டிப்பர் லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.
Published on

காடையாம்பட்டி,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த அக்கராகாரம் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

இந்த ஏரி முழுவதும் களிமண் மற்றும் ஒரம்பு நிறைந்துள்ளது. ஏரியில் மண் எடுக்க மாவட்ட கலெக்டர் சுமார் 4 அடி ஆழம் மட்டும் அனுமதி வழங்கி உள்ளார். 

ஆனால் இந்த ஏரியில் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை வைத்துக்கொண்டு ஒப்பந்த–தாரர் குறிப்பிட்ட அளவுக்கு இல்லாமல் 20 அடி முதல் 30 அடி வரை ஆழம் தோண்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் 4 அடி ஆழம் மட்டும் எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் சில இடங்களில் 20 அடிக்குமேல் மண் எடுப்பதாக கூறி பொதுமக்கள் டிப்பர் லாரிகளை முற்றுகை–யிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com