

சேலம்:
கிராமப்புறங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் கடம்பூர் ஊராட்சி சாலை முதல் தெடாவூர் தம்மம்பட்டி வரை 4.7 கி.மீ நீளத்திற்கு ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் குறித்து ஆய்வு கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் தரமான முறையில் உரிய கால அளவிற்குள் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மண்மலை ஊராட்சி, செங்கட்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்டவைகள் முறையாக கிடைக்கின்றதா என்பது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது ஆத்தூர் ஆர்.டி.ஓ. சரண்யா, கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.