மாட்டு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்ற 4 பேர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமத்தில் மாட்டு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
.
.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (48), மாட்டு வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்து தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரூர்பட்டி பாலிக்கடை என்ற இடத்தில் முத்துவை பாஸ்கர் தரப்பை சேர்ந்தவர்கள்  வழிமறித்தனர். உடனே முத்து தனது மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

அப்போது அங்கு இருந்த பாஸ்கர் தரப்பினர் முத்துவின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்றதாக கூறப்படுகிறது . இதுபற்றி முத்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை மீட்டு தருமாறு புகார் கொடுத்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், புள்ளியண்ணன், கண்ணன், வல்லரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com