மதுவை பதுக்கி விற்ற 3 பேர் மீது வழக்கு

மதுவை பதுக்கி விற்ற 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் சிலர் முறைகேடாக மதுவை பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அண்ணாசிலை அருகிலுள்ள மதுபான கடை அருகே விற்பனைக்காக பாட்டிலுடன் இருந்த சின்னையன் என்பவரிடம் இருந்து 245 குவாட்டர் பாட்டிலும். 17 பீர் பாட்டில் உட்பட பணம் 7850 யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆரூர்பட்டி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டுவரும் மதுபான கடை அருகே மது பாட்டில் விற்பனை செய்துகொண்டிருந்த ராமிரெட்டிபட்டி மணிகண்டன் .சின்னப்பம்பட்டி முருகன் ஆகியோரிடம் இருந்து 5 குவாட்டர் பாட்டில் பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com